(UTV|COLOMBO)-களனி, பியகம, பேலியேகொட, வத்தளை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் நீர் விநியோகத் தடை அமுலாக்கப்படவுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.
இன்று காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிவரையிலான 9 மணி நேரத்திற்கு இந்த நீர்விநியோகத் தடை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக குறித்த நீர் விநியோகத் தடை ஏற்படுத்தப்படுவதாக, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]