சூடான செய்திகள் 1

கண்டியில் மூடப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் திறப்பு

(UTV|KANDY)-கண்டி காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற வன்முறையின் போது ஏற்பட்ட பொருட்சேதங்கள் குறித்து, இதுவரை முறையிடாதவர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் தமது முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியகச்சருமான ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

கண்டி வன்முறையினர் போது பெருமளவு சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது.

இது தொடர்பான முறைபாடுகளை அருகில் உள்ள காவல்நிலையில் பதிவு செய்யுமாறு, காவற்துறை ஊடக பேச்சாளர் பொது மக்களிடம் கோரியுள்ளார்.

இதனிடையே, கண்டியில் மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஏற்பட்ட குழப்பநிலைகள் காரணமாக கடந்த 7ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் தற்போது காவற்துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பின் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் நாடு முழுவதிலும் 230 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவற்றுள் கண்டிக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு குழப்ப நிலையகளை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக பாரபட்சமின்ற சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு சட்டம் மன்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மொனராகலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் எங்கேயாவது, எவ்வாறாவது குழப்பங்கள் ஏற்படுத்தும் சம்பவங்கள் இடம்பெறும் பட்சத்தில் அது குறித்து உடனடியாக தேடி ஆராயுமாறு, அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர்களின் ஊடாக இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக, உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மட்டக்களப்பு, திருகோணமலை மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில்

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து விலக தீர்மானம்