(UTV|COLOMBO)-முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை இனவாதிகள் தாக்கி, எரித்தபோதும் இன்னும் முஸ்லிம்கள் பொறுமையாக இருக்கின்றனர் என்றால், அவர்கள் ஆயுதத்தின் மீதோ, தீவிரவாதத்தின் மீதோ நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர் என்பதையே அது உணர்த்துவதாக, அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை தனித்தனியாக சந்தித்தபோது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெளிவுபடுத்தினார்.
இந்த சந்திப்பின்போது, மகாநாயக்க தேரர்கள், அம்பாறை, கண்டி வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவித்ததுடன், முஸ்லிம்கள் தொடர்பாக நிலவுகின்ற சில ஐயப்பாடுகளையும் வெளிப்படுத்தினர்.
வில்பத்துக் காட்டை அமைச்சர் ரிஷாட் அழித்து மக்களை குடியேற்றுவதாக ஒரு குற்றச்சாட்டு இருப்பதாகவும் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்த போது, அது பற்றி அமைச்சர் ரிஷாட் தேரரர்களிடம் விளக்கமளித்தார்.
“சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், வட மாகாணத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள், தாம் வாழ்ந்த இடங்களில் மீண்டும் மீளக்குடியேறுவதற்காக, அவர்கள் வாழ்ந்த காணிகளில் வளர்ந்திருந்த காடுகளை துப்புரவாக்கிய போது, இந்தக் குற்றச்சாட்டு என்மீது எழுந்தது. நானும் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு அகதியே. இனவாத நோக்கத்தில் மீள்குடியேற்றத்தைத் தடுப்பதற்காக வேண்டுமென்றே இவ்வாறான கதைகளை பரப்பி வருகின்றனர்.
இந்த விவகாரம் சம்பந்தமாக ஜனாதிபதி விசாரணை குழுவொன்றை நியமித்து, அந்த விசாரணை அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட போதும், இதுவரை அது வெளிப்படுத்தப்படவில்லை. சபாநாயகரிடமும் இந்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை அறிவதற்காக, பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து, விசாரணை செய்யுமாறு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். தவறு இருந்தால் உரியவர்களுக்குத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுங்கள் என்று நாங்கள் வேண்டியுள்ளோம்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]