(UTV|COLOMBO)-தடை செய்யப்பட்ட பொலித்தீன் வகைகளின் பாவனையை தடுத்து நிறுத்தும் திட்டம் மும்முரமாக முன்னெடுக்கப்படுகிறது.
மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்களை ஒன்றிணைந்து சுற்றாடல் பொலிஸ் பிரிவின் பங்களிப்புடன் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிகார சபை அறிவித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் தடை நடைமுறையில் உள்ளது.
இதன்கீழ் சில வகை பொலத்தீன்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு போன்றவை தடை செய்யப்பட்டிருந்தன. இந்தத் தடை முறையாக அமுலாகிறதா என்பதை கண்டறிவதற்காக நாடு முழுவதிலும் விசேட சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
f