சூடான செய்திகள் 1

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கபடும்

(UTV|COLOMBO)-பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிக்க விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை இன்றைய தினமும் அமுலில் இருக்கும் என தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் நிலவும் நிலமையை கருத்திற் கொண்டு இந்த தற்காலிக தடை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய இணையம் ஊடாக பயன்படுத்தப்படும் பேஸ்புக், வைபர், இமோ, வட்சப் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு தொடர்ந்தும் பிரவேசிக்க முடியாது அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மாற்று வழிகளை பயன்படுத்தி பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறானவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இனவாத கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடுகின்றவர்கள் மற்றும் பரிமாற்றுகின்றவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கான ஆதரவை குற்றத்தடுப்பு விசாரரணை திணைக்களத்திடம் பெற்று கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

சற்று முன்னர் தொடக்கம் மீண்டும் பதற்ற நிலைமை..!!

நாலக டி சில்வாவின் வழக்கு ஒத்திவைப்பு

புகையிரத ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பால் 45 ரயில் சேவைகள் இரத்து