வகைப்படுத்தப்படாத

கண்டி ஊடரங்கு சட்டம் நீக்கம்-பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மேலும் 9 பேர் கைது

(UTV|KANDY)-கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தின் அமைதியை தொடர்ந்தும் பேணும் முகமாக நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், கண்டி மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளின் பாதுகாப்புக்காக காவற்துறையினர் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவர்கள் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால சட்டத்தின் கீழ் அவர்கள் எதிர்வரும் 14 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நேற்று காலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்குள் வீடுகள், வணக்கஸ்தலங்கள் ஆகியவற்றிட்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் 71 பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சேதமடைந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியவற்றின் தரவுகளை சேரிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் எச்.எம்.பீ ஹிட்டிசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கிய அறிக்கை

சூப்பரான தேங்காய் பிஷ் பிரை செய்வது எப்படி?

வட கொரியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு சபை கடும் கண்டனம்