சூடான செய்திகள் 1

நாட்டை கட்டியெழுப்ப சகல பெண்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

(UTV|COLOMBO)-அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பாரிய சக்தியாக முன்னோக்கி பயணிக்க சகல பெண்களுக்கும் தாம் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சகல இனங்களும் சமாதானத்துடனும், ஒற்றுமையுடனும் வாழும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு வழங்குவதே தாய்மையை அடிப்படையாகக் கொண்ட பெண்கள் சமுதாயத்தின் தற்போதைய கடமையாக உள்ளது.

தாய்மை மற்றும் பெண்களின் உரிமை தொடர்பில் அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயலாற்றுகின்றது.

இதனூடாக, பெண்களுக்கு சமூகத்தில் கிடைக்க வேண்டிய கௌரவத்தினையும் மதிப்பினையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் சமூகத்தின் சகல அங்கத்தவர்களும் தமது பொறுப்பினை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்

நாட்டின் சில பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் வழமைக்கு

சுகாதார துறை தவறுகள் பற்றி விசாரணைகள் தேவை – நாமல்