(UTV|AMERICA)-அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்கினார்.
இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். உலகளவில் பல படங்களும் விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், ஆஸ்கர் விருதை வென்ற படங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் த ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த இசை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு என 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது
கிறிஸ்டோபர் நோலனின் டங்கிர்க் படத்திற்கு 3 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. அதேபோல் பிளேட் ரன்னர் 2049, டார்க்கஸ்ட் ஹார், த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி உள்ளிட்ட படங்கள் தலா 2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளன.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]