சூடான செய்திகள் 1

கொள்கலன் பாரவூர்தி சாரதிகள் சேவை புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-கொழும்பு துறைமுகத்தில் இருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன் பாரவூர்தி சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் இன்றைய தினம் சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து இலங்கை தனியார் கொள்கலன் போக்குவரத்து சேவை சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுடன் கூடிய கொள்கலன்களை பரிசோதனை செய்தல் மற்றும் நிறை அளவீட்டையும் தனியார் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டமைக்கு   எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் பீ.ஐ.அப்தீன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நட்டயீடு வழங்கும் அலுவலகத்துக்கான சட்ட மூல இரண்டாம் வாசிப்பு…

போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை

நான்கு மணித்தியாலங்கள் மின்சக்தி அமைச்சின் செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு…