சூடான செய்திகள் 1

உலக சுகாதார அமைப்பு இலங்கைக்குப் பாராட்டு

(UTV|COLOMBO)-நாட்டின் தாய் மற்றும் சிசு மரண வீதத்தை கட்டுப்படுத்தல் மற்றும் நேரடி குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை என்பவற்றில் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு சமமான மட்டத்தை இலங்கை அடைந்துள்ளது.

 

இதனை உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டியுள்ளது. நாட்டின் சிசு மரண வீதம் குறைந்திருப்பதால் அமெரிக்கா போன்ற நாடுகளின் தரவுகளுக்கு சமமான மட்டத்தை இலங்கை அடைந்துள்ளது.

 

இலங்கையில் தாய் மற்றும் சிசு மரணவீதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் உலக சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது. உலக மட்டத்தில் கர்ப்ப காலத்தின் போதும்இ பிரசவத்தின் போதும் வருடாந்தம் உயிரிழக்கும் பெண்களின் சுமார் 3 இலட்சமாகும். இவற்றில் பெரும்பாலான மரணங்கள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே பதிவாகின்றன. எனினும்இ இந்த தாய் மரண வீதத்தை கட்டுப்படுத்தும் இலக்கை இலங்கை தற்போது வெற்றி கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சுவாயு கசிவால் 5 பேர் பாதிப்பு

போத்தலில் அடைக்கப்பட்ட நீரின் தரம் பற்றி ஜனாதிபதி பணிப்புரை

பள்ளிவாசல்களில் அறிவியுங்கள் மாணவர்கள் வீதியில் நின்றால் அழைத்துச் செல்வோம் – பொலிஸ்