வகைப்படுத்தப்படாத

சிரியாவில் 580 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்

(UTV|SYRIA)-சிரியாவின் வடக்கு பிராந்தியமான அஃப்ரினில், துருக்கி படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 8 துருக்கி படையினர் கொல்லப்பட்டதுடன், 13 பேர் வரையில் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் துருக்கி படையினர் இந்த பகுதியில் குர்திஸ் போராளிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையிலேயே இன்றைய மோதல் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிரியாவின் கிழக்கு கோட்டா பகுதியில் இடம்பெறும் தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விவாதிக்கவுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 18ம் திகதி முதல் அங்கு அரச படையினர் தாக்குதல்நடத்தி வருகின்றனர்.
இதில் இதுவரையில் 580 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அங்குள்ள சுமார் 3லட்சத்து 90 ஆயிரம் பொதுமக்கள் உணவு, மருத்துவ விநியோகங்கள் இன்றி அவதிநிலையில் இருப்பதாகவும் தொண்டு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Two drug traffickers held by Navy in Hambantota

Dr. Shafi produced before Court

அந்தமான் தீவு பகுதிகளில் நிலநடுக்கம்…