வகைப்படுத்தப்படாத

சவுதி அரேபியாவில் முதல் முறையாக ஒரு பெண் துணை மந்திரியாக நியமனம்

(UTV|SAUDI ARABIA)-எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடக்கிறது. சல்மான் மன்னர் ஆக இருக்கிறார். அவரது மகன் முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராக உள்ளார்.

இவர் பொறுப்பு ஏற்றதும் சவுதி அரேபியாவில் இருந்து பல அதிரடி சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்டவும், தொழில் தொடங்கவும், கால்பந்து போட்டிகளை கண்டுகளிக்கவும் அனுமதி வழங்கினார். ஏற்கனவே இருந்த தடைகளை நீக்கினார்.

லஞ்ச ஊழலில் ஈடுபட்ட இளவரசர்கள், மந்திரிகள், கோடீஸ்வரர்கள் என 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தார். அவர்களை ரியாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சிறை வைத்தார்.

இந்தநிலையில் சவுதி அரேபியாவில் ராணுவ தளபதிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ராணுவம், விமானபடை தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் துணை மந்திரியாக பெண் ஒருவரையும் மன்னர் சல்மான் நியமித்துள்ளார். சமூக முன்னேற்றம் மற்றும் தொழிலாளர் நலத்துறை துணை மந்திரியாக டாக்டர் தாமாதர் பின் யூசுப் அல்-ரம்மா என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்ற முக்கிய துறையில் பெண் ஒருவர் துணை மந்திரியாக நியமிக்கப்படுவது அந்த நாட்டில் இதுவே முதல் முறையாகும். இவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ரோடியோலஜி மற்றும் மருத்துவ பொறியியல் துறையில் பி.ஹெச்.டி. படித்தவர். 2016ல் சவுதி அரேபியாவின் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினராக இருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

පුජිතට සහ හිටපු ආරක්‍ෂක ලේකම්ට ඇප

ரூபாய் 77 லட்சம் கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் சிக்கினர்

மேல்கொத்மலை ஆற்றில் பாய்ந்து மூச்சக்ரவண்டி விபத்து இருவர் படுகாயம்