சூடான செய்திகள் 1

சுழல் காற்றினால் அட்டன் தலவாக்கலை பகுதிகளில் 57 குடியிருப்புகள் சேதம் அட்டன் டிப்போவும் கடும் பாதிப்பு

(UTV|HATTON)-திடீரென வீசிய சுழல் காற்றினால் அட்டன் தலவாகலை உள்ளிட்ட பல பகுதிகளில் 57 குடியிருப்புகள் சேதமாகியுள்ளதுடன்  இலங்கை போக்குவரத்து  சபையின் அட்டன் டிப்போவும் சேதமாகியுள்ளது

27.02.2018 இரவு தீடிரென ஏற்பட்ட மழையுடன் கூடிய சுழற்காற்றினால் குடியிருப்புகளின் கூரைகள் அள்ளுண்டுள்ளது
தலவாக்கலை – கிரேட்வெஸ்டன் தோட்டம் லூசா, ஸ்கல்பா, மலைத்தோட்டம் ஆகிய பிரிவுகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 50ற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ள நிலையில் வீட்டு உபகரணங்களும் சேதமாகியுள்ளது
பாதிக்கப்பட்ட 50ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 150ற்கும் மேற்பட்டோர் தோட்டத்திலுள்ள அவர்களின் உறவினர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் செய்து வருவதோடு, மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. மேலும் அட்டன் டன்பார் பகுதியில் 6 வீடுகளின் கூரைப்பகுதிகள் பாதிப்படைந்துள்ளதுடன் அட்டன் காமிபுர பகுதியில் குடியிருப்பென்றும் அட்டன் டிப்போவின்  கூரைப்பகுதிகள் காற்றினால் அள்ளுண்டு அங்கு தரித்து நின்ற காரில் வீழ்த்துள்ளமையினால் கார் சேதமாகியுள்ளது
 அன்மைய நாட்களாக மலையக பகுதிகளில் மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது .
மு.இராமச்சந்திரன்

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

சொத்து விபரங்களை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்…

தாமதமான தொடரூந்து போக்குவரத்து வழமைக்கு

அன்னம் சின்னம் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது