கேளிக்கை

ஸ்ரீதேவியின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் போலீஸ் அனுமதி

(UTV|DUBAI)-துபாயில் மரணமடைந்த ஸ்ரீதேவியின் உடல் நேற்று பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. குளியலறையில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கியதால் அவர் உயிரிழந்தார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அவரது உடல் நேற்று பதப்படுத்தப்படவில்லை. இதனால், மும்பைக்கு உடலை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், அவரது கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின்னர் ஸ்ரீதேவியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க துபாய் போலீசார் அனுமதிக்கடிதம் அளித்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இன்று இரவுக்குள் அவரது உடல் பதப்படுத்தப்பட்டு தனி விமானம் மூலம் நள்ளிரவுக்குள் மும்பை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

தன் குழந்தையுடன் விளையாடும் எமி [PHOTOS]

பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் விஜய்

நீச்சல் உடையில் நடிகை ஆண்ட்ரியா!