வணிகம்

உர நிவாரணம் தொடர்பில் புதிய கொள்கை

(UTV|COLOMBO)-உர நிவாரணம் தொடர்பிலான புதிய கொள்கையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பரீசீலனை செய்கின்றது.

 இதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான கவனம் செலுத்தப்படும். தேசிய பொருளாதார பேரவையின் கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்பட்டது. உள்ளுராட்சி தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முதல் தடவையாக பேரவைகூடியது.

 

உரத்திற்குப் பதிலாக நிதியுதவி வழங்குவதில் மாற்றங்களை கொண்டுவருவது பற்றியும், உரத்தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் பற்றியும் கூட்டத்தில் ஆராயப்பட்டன. உரத் தேவை சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன், விளைநிலங்கள் மாசடைவதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டத்தையும் வகுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

 

மேலதிகமாக உரத்தை களஞ்சியப்படுத்தி வைப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. க்ளைபோசெட் மீதான தடை பற்றி பல்வேறு யோசனைகள் முன்மொழியப்பட்டன. இந்த இரசாயனம் தொடர்பான சட்டங்களை திருத்தியமைத்து புதியகொள்கையை அறிமுகப்படுத்துவதன் மூலம் இடர்களைக் களைவது பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

 

வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தவது பற்றியும் தேசிய பொருளாதார பேரவையில் ஆராயப்பட்டது. உணவுப் பொருட்களின்விலையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் பற்றி யோசனை கூறப்பட்டது. குறிப்பாக அரிசி, தேங்காய்போன்றவற்றின் விலைகளை குறைப்பது பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. தேசிய பொருளாதாரப் பேரவை, நுகர்வோர்அலுவல்கள் அதிகார சபை, மத்திய வங்கி முதலான நிறுவனங்களுடன் சேர்ந்து துரித யோசனைத் தொடரை சமர்ப்பிப்பதன்மூலம் உணவுப் பொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான யோசனை இதன்போது முன்மொழியப்பட்டது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

காற்று வலுவைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தேசிய காற்று வலு திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61280 ஏக்கரில் சிறுபோகச் செய்கை

சமையற்கலை உணவு எக்ஸ்போ 2018 இல் பிரகோசித்த கிரிஸ்பிறோ