சூடான செய்திகள் 1

தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் பிரச்சினைகள் இல்லை

(UTV|COLOMBO)-தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் அரசியல் யாப்பு ரீதியான பிரச்சினைகள் எவையும் இல்லை என்று, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தேசிய அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்புகள், தங்களுக்கு இடையிலான உடன்படிக்கையை முன்கொண்டு செல்ல இணக்கம் வெளியிட்டுள்ளன.

இதனால் குறித்த விடயத்தில் சட்டரீதியான பிரச்சினைகள் எவையும் இல்லை என்று, சட்டத்துறை நிபுணர்கள் தமக்கு விளக்கமளித்திருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தேசிய அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்பினர் சட்டரீதியான விடயங்களை பூரணப்படுத்த மேலதிகமாக ஏதேனும் செய்ய வேண்டியுள்ளதா? என்பது குறித்து ஆராய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தபால்மா அதிபர் – பந்துல குணவர்தன இன்று விசேட கலந்துரையாடல்

தேசிய அரசுக்கு ஆதரவு இல்லை: சஜித் தரப்பு அறிவிப்பு

போட் சிற்றி திட்டத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பை அளவீடு செய்யும் பணி ஆரம்பம்