(UTV|COLOMBO)-நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் நாளை மறுதினம் முதல் (24) சிறிய மாற்றம் ஏற்படும் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக் கூடும்.
காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஏனைய பிரதேசங்களில் பொதுவாக சீரான வானிலை காணப்படும் என்று வளிமண்டவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் அதிகாலை வேளையில்; உறைபனி காணப்படக்கூடும்.
இரவு மற்றும் காலைவேளைகளில் குளிரான காலநிலை எதிர்பார்க்கப்படுவதுடன், குறிப்பாக நாட்டின் தென்பகுதியின் சில இடங்களில் காலையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.
காலியிலிருந்து ஹாம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரையோரங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன்கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]