சூடான செய்திகள் 1

பேருந்து ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பம்

(UTV|COLOMBO)-தியத்தலாவையில் தனியார் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் இராணுவத்திடமும், காவல்துறையினரிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேருந்தில் பயணித்த இராணுவச் சிப்பாய் ஒருவர் தம்வசம் வைத்திருந்த கைக்குண்டு ஒன்று வெடித்ததன் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
தியத்தலாவை – கஹகொல்ல பகுதியில் நேற்று அதிகாலை 05.45 அளவில் தனியார் பேருந்து ஒன்றில் குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது.
இதில், காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களுள், 7 இராணுவத்தினரும், 5 கடற்படையினரும், ஏழு பொதுமக்களும் அடங்குகின்றனர்.
இந்த நிலையில், படையினர் உட்பட 14 பேர் தியத்தலாவை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

சிறுமியை திருமணம் முடித்த நபருக்கு விளக்கமறியல்

வசீம் தாஜுதீன் கொலை – சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பான விசாரணை அறிக்கை ஜுன் மாத முற்பகுதியில்