வகைப்படுத்தப்படாத

சைட்டம் மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் இறுதி தீர்மானம்

(UTV|COLOMBO)-மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று  மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர், அந்த பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, சைட்டம் மருத்து கல்லுரியில் தற்போது பயின்று வரும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் அடிப்படை தகுதிகளை ஆராய்ந்து அதன்படி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மேலும் மூவர் குணடைந்தனர்

India building collapse: Dozens trapped in south Mumbai

அமெரிக்கா மீது வெனிசூலா அதிபர் குற்றச்சாட்டு