சூடான செய்திகள் 1

மறைந்த கந்தையா நீலகண்டனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

(UTV|COLOMBO)-காலஞ்சென்ற கந்தையா நீலகண்டனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பம்பலபிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கந்தையா நீலகண்டனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தியதுடன் அவரது உறவினர்களுக்கு ஆழந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

கந்தையா நீலகண்டனின் மறைவு செய்தியை அறிந்து கவலையடைந்தேன். மக்களை ஆன்மீக ரீதியில் நல்வழிப்படுத்தி அவர்களை ஒழுக்கசீலர்களாக வாழ வழிகாட்டியதே சிறந்த சமூகப்பணி என்பது எனது நம்பிக்கையாகும். அந்த வகையில் கந்தையா நீலகண்டன் தொழில்முறை சட்டத்தரணியாக இருந்தபோதிலும் ஆன்மீக துறையிலும் அதிக நாட்டம் கொண்டிருந்தார் என அறியும்போது ஆன்மீக எண்ணங்களின் ஊடாகவே சமூகத்தில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதை அவரும் நம்பியிருந்தார் என்பதை இதனால் ஊகிக்கக்கூடியதாகவுள்ளது என்று ஜனாதிபதி தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

சிரேஷ்ட சட்டத்தரணியும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவருமான கந்தையா நீலகண்டன் (71) கடந்த ஞாயிற்றுக்கிழமை சுகயீனம் காரணமாக கொழும்பில் காலமானார்.

யாழ்ப்பாணம் வடமராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட கந்தையா நீலகண்டன், உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி மற்றும் யாழ். இந்துக்கல்லூரியில் ஆரம்பக் கல்வியை கற்றார்.பின்னர் சட்டக்கல்லூரியில் தனது சட்டப்படிப்பை தொடர்ந்து சட்டத்தரணியானதுடன் தமிழுக்கும் சைவத்திற்கும் அருந்தொண்டு ஆற்றிவந்த இவர் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவராக பணியாற்றினார்.

 

கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் தலைவராகவும் உறுப்பினராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது. இவர் பல்வேறு இந்த மத அமைப்புக்கள், ஆலய நம்பிக்கை சபைகள், அறக்கட்டளை அமைப்புக்கள் போன்றவற்றினூடாக மக்கள் சேவையாற்றியவர் ஆவார்.யுத்த கால அசாதாரணமான சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்து பெருந்தொகையான மக்கள் அல்லலுற்றபோது இந்துமாமன்றத்தின் ஊடாகவும் மனிதநேய அமைப்புக்களின் ஊடாகவும் மற்றும் சமூக நலன்விரும்பிகளினூடாகவும் மட்டுமன்றி தனது சொந்த நிதியிலிருந்தும் உதவிவழங்கியவராவார்.

கல்வியில் வறிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக கற்றல் உபகரணங்கள் , உபகரண நிதி என்பவற்றை வழங்கிய கொடைவள்ளலாவார். இலங்கை வாழ் இந்துக்கள் பல்வேறு இடர்களுக்கு முகங்கொடுத்தபோது அவர்களுக்காக துணிச்சலாக குரல் கொடுத்த ஒரு மா மனிதர் இவர் ஆவார். தமிழுக்கும் இந்து அறநெறிக்கும் அரும்பணியாற்றிய அமரர் நீலகண்டனின் மறைவு இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி புலம்பெயர்வாழ் இந்துமக்களுக்கும் பாரிய இழப்பாகும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்தும் நடவடிக்கையானது நிறுத்தம்…

வசீம் தாஜுதீன் கொலை – சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

அனைத்து பல்கலைகழகங்களுக்கும் பூட்டு