வகைப்படுத்தப்படாத

மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள் காரணம் இதோ….

(UTV|COLOMBO)-உலகம் முழுவதும் KFCயின் சிக்கன் என்றால் பிரபலம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை KFC சிக்கன் என்றால் கொள்ளைப்பிரியம். இந்த நிலையில் பிரிட்டனில் உள்ள இந்த நிறுவனத்தின் 900 கடைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி சிக்கன் பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

KFC நிறுவனத்தின் பிரிட்டன் கடைகள் அனைத்திற்கு சிக்கன் சப்ளை செய்வது பிரிட்டனில் உள்ள DHL என்ற நிறுவனம்தான்.

DHL என்னும் இறைச்சி சப்ளை இந்த நிறுவனத்திடம் தற்போது போதிய சிக்கன் கையிருப்பு இல்லாத்தால் KFC க்கு சிக்கன் சபளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம்.

இதனால் நேற்று மட்டும் 560 KFC கடைகள் பிரிட்டன் முழுவதும் மூடப்பட்டிருந்ததாகவும், இதே நிலை நீடித்தால் பிரிட்டனில் உள்ள 900 கடைகளையும் விரைவில் மூடும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. எனினும் இந்த பிரச்சினையை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பதாக DHL நிறுவனம் கூறியுள்ளது ஒரு சிறு ஆறுதல். அதே நேரத்தில் பிரிட்டனை தவிர உலகின் மற்ற நாடுகளில் உள்ள KFC கடைகளுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

Related posts

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவித்தல்

பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – சுகாதாரப் பிரிவினர்

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் பாகிஸ்தானுக்கு விஜயம்