சூடான செய்திகள் 1

இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு

(UTV|COLOMBO)-தேசிய அரசாங்கத்தின் அங்கிகாரம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை விடுக்க உள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது எதிர்கட்சிகளின் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும ஆகியோரால் நல்லாட்சி அரசாங்கத்தின் காலம் தொடர்பில் தொடுத்த கேள்விகளுக்கு அமைய இந்த விசேட உரை நிகழ்த்தப்படவுள்ளது.
நேற்றைய தினம் கருத்து தெரிவித்த சபாநாயகர், அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் இதுவரை தமக்கு எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லையென குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், பிரதமருடன் கலந்துரையாடியதன் பின்னர் இன்றைய தினம் அதற்கான பதிலை வழங்குவதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உள்ளுராட்சிமன்றங்களில் 25 சதவீதம் பெண் பிரதிநிதித்துவம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து நேற்றைய நாடாளுமன்ற அமர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு

மூன்று தினங்களுக்கு அரச விசேட விடுமுறை

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அபராதம் – உயர் நீதிமன்றம்