சூடான செய்திகள் 1

கஹகொல்லயில் பஸ்ஸில் தீ பரவியமை பயங்கரவாத தாக்குதல் அல்ல

(UTV|COLOMBO)-பண்டாரவளை, தியத்தலாவ, கஹகொல்ல பகுதியில் இன்று அதிகாலை பயணிகள் பஸ்ஸொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 5.30 அளவில் பண்டாரவளையில் இருந்து எபரவ கிராமத்தை நோக்கி பயணித்த பஸ்ஸிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களுள் பெண்ணொருவருடன் 7 பொதுமக்களும் 12 படையினரும் அடங்குகின்றனர்.

இதுவொரு பயங்கரவாத தாக்குதல் அல்லவென இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.

வெடிப்புச்சம்பவம் ஒன்றை அடுத்தே தீப்பரவியதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

நாளை முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு

கொழும்பின் பாதுகாப்பினை பலப்படுத்த மேலதிக பொலிஸார் சேவையில்

அமித் வீரசிங்க உள்ளிட்ட மூன்று பேரின் உத்தரவு செயற்படுத்தப்பட்டது