சூடான செய்திகள் 1

பதவியிலிருந்து விலகிய முத்துசிவலிங்கம்

(UTV|COLOMBO)-இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகவும் தான் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தெரிவித்துள்ளார்.

கொட்டகலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவராக பதவி வகித்த முத்துசிவலிங்கம், மருத்துவ காரணங்களின் அடிப்படையில் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இதையடுத்து, கட்சியின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் கட்சியின் தேசிய நிர்வாக சபை ஏகமனதாக தம்மை நியமித்துள்ளதாகவும் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு பிரதி அமைச்சுப் பதவி கிடைத்தமை தொடர்பிலும் அவர் விளக்கமளித்துள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஓய்வு பெறும் நீதியரசர் ஈவா வணசுந்தர

அமித் வீரசிங்க பிணையில் விடுதலை

கரவெட்டி பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம்