வகைப்படுத்தப்படாத

மைத்திரி – ரணில் அரசை பாதுகாக்க வல்லரசு நாடுகள் முயற்சி

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற முயற்சிகளில் உலகின் வல்லரசு நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுன கட்சியின் பேச்சாளரான டலஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

2015ல் மஹிந்த ராஜபக்ஷவை அகற்றும் திட்டத்தை முன்னெடுத்தவர்கள் இப்போது கூட்டு அரசாங்கத்தைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டுள்ளார்கள். உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் இடம்பெறும் வெளிநாட்டுத் தலையீடுகள் தீவிர கரிசனைக்குரியது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர் அமெரிக்க மற்றும் இந்தியத் தூதுவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்துப் கலந்துரையாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஹொங்கொங்கில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுப்பு

Shreya and Sonu come together for love song

கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மதில் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலி.