வகைப்படுத்தப்படாத

இஸ்ரேல் பிரதமர் மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு

(UTV|ISRAEL)-இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமீன் நெதன்யாகு மீது லஞ்ச ஊழல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய காவல்துறையினரை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

இரு வேறு வழக்குகளில் லஞ்சம் மோசடி மற்றும் நம்பிக்கைக்கு விரோதமாக அவர் நடந்து கொண்டுள்ளதை நிரூபிக்க போதிய ஆதாரம் உள்ளதாக இஸ்ரேல் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அடிப்படையற்றது என்றும், தாம் தொடர்ந்தும் பிரதமராக பணியாற்ற போவதாகவும் நெதன்யாஹூ தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பத்திரிக்கையான ‘எடியாட் அக்கோரனாட்’ என்ற பத்திரிகை தனக்கு சாதகமாக செய்தி வெளியிட வேண்டும் என்று நெதன்யாஹு கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு பதிலீடாக அந்த பத்திரிகையின் போட்டி பத்திரிக்கையை கட்டுப்படுத்துவதாகவும் நெதன்யாஹு உறுதிவழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹாலிவுட் களைஞர்கள் மற்றும் பிற ஆதரவாளர்களிடமிருந்து மில்லியன் மதிப்பிலான பரிசுப் பொருட்களை நேதன்யாஹூ பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

பல மாகணங்களில் இடியுடன் கூடிய மழை

Fantasy Island to set up US $4 million Entertainment Park in Battaramulla

தமக்கு எதிராக எந்த விசாரணையும் இடம்பெறவில்லை – ட்ரம்ப்