வகைப்படுத்தப்படாத

அந்தமான் தீவுகளில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|ANDAMAN)-அந்தமான் தீவுகளில் இன்று காலை 8.09 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இது மையம்  கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் இது 5.6 அலகாக பதிவாகியிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. ரிக்டர் அளவில் 6-க்கும் அதிகமாக நிலநடுக்கம் ஏற்பட்டால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளன. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடைசியாக ஜனவரி 14-ம் தேதி அந்தமான் தீவுகளில் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் ஊடக அறிக்கை

සරසවි අනධ්‍යන සේවකයින් හෙට වර්ජනයකට සුදානම් වෙයි.

ගුරුවරු ලෙඩ නිවාඩු දමයි