(UTV|COLOMBO)-மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அனுமதி வழங்குமாறு வெலிகட சிறைச்சாலைக்கு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தற்போது வெலிகட சிறைச்சாலையில் உள்ள அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரிடம் வாக்குமூலத்தை எதிர்வரும் 13, 14, மற்றும் 15 ஆம் திகதிகளில் பெற்றுக்கொள்ள குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் வெலிகட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கோட்டை நீதவான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]