(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய வெற்றிப் பெற்ற மா நகர சபை பறிபோகும் நிலையில்…!
ஹம்பாந்தோட்டை மா நகர சபை அதிகாரத்தை ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இணைந்து கைப்பற்றவுள்ளதாக முன்னாள் மேயர் எராஜ் பிரனாந்து தெரிவித்துள்ளார்.
9 ஆசனங்களைப் பெற்று ஹம்பாந்தோட்டை நகர சபையை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் , ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி 7 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்பு 4 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.
இந்த இரண்டு கட்சிகளும் இணைந்தால் ஹம்பாந்தோட்டை நகர சபை ஐக்கிய தேசிய கட்சி வசமிருந்து பறிபோகும் நிலை ஏற்படும்.
எவ்வாறாயினும் , இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் மற்றும் கூட்டமைப்பின் தலைவர்ளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தற்போதைய நிலையில் தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் மேயர் எராஜ் பிரனாந்து தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]