வகைப்படுத்தப்படாத

ரஷியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 71 பேர் உயிரிழப்பு

(UTV|RUSSIA)-ரஷியாவில் உள்ள டொமொடெடொவொ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கிய விபத்தில் அதில் பயணித்த 71 பேரும் உயிரிழந்தனர்.

ரஷியா தலைநகர் மாஸ்கோவில் டொமொடெடொவொ விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து ஆர்ஸ்க் நகருக்கு இன்று சரடோவ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு ஏ.என். 128 ரக உள்ளூர் போக்குவரத்து விமானம் 65 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் புறப்பட்டது.
இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ரேடாரில் இருந்து விமானம் காணாமல் போயுள்ளது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி தொடங்கப்பட்டது.
இதனிடையே, மாஸ்கோ பகுதியில் உள்ள அர்குனோவோ கிராமத்தில் அந்த விமானம் விழுந்து நொருங்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அப்பகுதியில் மீட்புப்பணிகள் தொடங்கப்பட்டது. அந்த விமானம் வானில் இருந்து விழும்போதே தீப்பிடித்து எறிந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதனால் அதில் பயணித்த யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்புகள் இல்லை என கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 71 பேரும் உயிரிழந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்ற்ய் வருகிறது. விமான விபத்தில் 71 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

வெகுவாக அதிகரித்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகை!

இந்தோனேசியாவின் பபுவாவில் கடும் மழை-73 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்