வகைப்படுத்தப்படாத

51 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை

(UTV|COLOMBO)-ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்தில் நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

2014ம் ஆண்டு ஜூலை மாதம் போதை தடுப்பு பொலிஸ் பிரிவினரால் பொரள்ளை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 51.88 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டு, ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதுடன், இதன் போது சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரை குற்றவாளி என்று மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க தீர்ப்பளித்துள்ளார்.

அதன்படி குற்றவாளிக்கு எதிராக மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மின்சார கட்டண குறைப்பு நடவடிக்கை

நந்திக்கடலில் மீன்கள் இறப்பு : நாரா நிறுவனம் ஆய்வு

අධිකරණ ඇමති සහ ශ්‍රී ලංකාවේ මාලදිවයින් තානාපති අතර හමුවක්.