உள்நாடுசூடான செய்திகள் 1

51சதவீதமான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும்என்ற நிலைமைகள் உருவாகின்றபோதே அறிவிப்பேன் – தம்பிக்க

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தேவையான 51சதவீதத்துக்கும் அதிகமானவாக்குகளை உறுதியானதும் எனது உத்தியோக பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா வீரகேசரிக்கு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் சார்பில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில்போட்டியிடுவதற்கு தம்மிக்க பெரேரா உட்பட நால்வரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சின் பொதுச்செயலாளரும் பாராளுமன்றஉறுப்பினருமான சாகர காரியவசம் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பொதுஜனபெரமுனவின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்களமிறங்குவதற்கு தயாராகின்றீர்களா என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகவே உள்ளேன். எனது பெயரை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

அவ்வாறான நிலையில், நான் இன்னமும் உத்தியோக பூர்வமான முடிவினைஎடுக்கவோ அறிவிக்கவோ இல்லை. எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலில்வெற்றி பெறுவதற்கு தேவையான 51சதவீதமான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும்என்ற நிலைமைகள் உருவாகின்றபோது நான் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராககளமிறங்கும் முடிவினை உத்தியோக பூர்வமான அறிவிப்பைச் செய்வேன் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கு விசேட அறிக்கை

editor

பல பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை

பவித்ரா வன்னியாராச்சிக்கு புதிய பதவி