(UTV|COLOMBO)-உள்ளுராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்புக்காக சொந்த பிரதேசங்களை நோக்கி செல்லும் மக்களின் நலன் கருதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தொடரூந்து திணைக்களம் ஆகியன விஷேட போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.
பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து தரிப்பிடத்திலிருந்து நேற்றிரவு முதல் தூர பிரதேசங்களுக்கான போக்குவரத்துகள் இடம்பெற்று வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எச்.ஹேமசந்ர தெரிவித்துள்ளார்.
வழமையாக சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்துகளுக்கு மேலதிகமாக 200 பேரூந்துக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயணிகளின் போக்குவரத்தை இலகுப்படுத்துவதற்காக இன்றைய தினம் புறக்கோட்டை மத்திய பேரூந்து தரிப்பிடத்திலிருந்து மேலதிகமாக 102 அரச பேரூந்துக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்றும் நாளையும் வழமையான தொடரூந்து சேவைகள் இடம்பெறும் என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேவையேற்படின் மேலதிகமாக சேவைகளை முன்னெடுக்க தொடரூந்து திணைக்களம் தயாராகவிருப்பதாக அதன் மேலதிக பொதுமுகாமையாளர் விஜய சமரசிங்ஹ தெரிவித்தார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]