(UTV|COLOMBO)-முதல்முறையாக விண்வெளியில் இயங்கி வரும் சர்வதேச விண்வெளி மையத்தில் பெட்மின்டன் போட்டி நடைபெற்றது அனைவரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பெட்மின்டன் விளையாடிய வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது.
இந்த போட்டியில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் கலந்து கொண்டனர்.
புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் நடப்பதே சிரமமாக இருக்கும் நிலையில் வீரர்கள் பெட்மின்டன் விளையாடினர். நான்கு பேரும் இரு அணிகளாக பிரிந்து விளையாடிய வீடியோ அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பூமிக்கு வெளியே பெட்மின்டன் விளையாடியது இதுவே முதல்முறையாகும்.
இது குறித்து பேசிய ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர், ‘விண்வெளியில் விளையாடுவது செவ்வாய் கிரகத்திற்கு சென்று கொடி நாட்டுவதற்கு சமம்’ என கூறினார்.
மேலும் இது வீரர்களுக்கு மன அமைதியை கொடுப்பதோடு அவர்கள் இடையே நட்புறவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]