விளையாட்டு

ஒரு நாள் போட்டிகளில் மற்றுமொரு மைல்கல்லை கடந்த தோனி

(UTV|INDIA)-தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய விக்கட் காப்பாளர் மகேந்திரசிங் தோனி மற்றுமொரு மைல்கல்லை எட்டினார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

முதலிரண்டு போட்டியிலும் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்த நிலையில் , நேற்று இடம்பெற்ற போட்டியிலும் 126 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவு செய்தது.

கேப்டவுனில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோணி , விக்கட் காப்பாளராக புதிய மைல்கல்லை எட்டினார்.

இதுவரை தோனி ஒருநாள் அரங்கில் 294 பிடியெடுப்புக்கள், 105 ஸ்டெம்பிங் என மொத்தமாக 399 ஆட்டமிழப்புக்களை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் தென் ஆப்ரிக்க அணித்தலைவர் மார்க்ராமை ஸ்டெம்பிங் செய்த தோனி, ஒருநாள் அரங்கில் 400 வது விக்கட் வீழ்ச்சிக்கு காரணமான விக்கட் காப்பாளர் என்ற பெருமையை பெற்றார்.

இதன் மூலம் ஒருநாள் அரங்கில் 400 விக்கட் வீழ்ச்சிக்கு காரணமான நான்காவது விக்கட் காப்பாளர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.

இது தவிர, இம்மைல்கல்லை எட்டிய முதல் இந்திய விக்கட் காப்பாளர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.

இப்பட்டியலில் இலங்கையின் சங்ககரா (482 விக்கட்), அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (472 விக்கட்), தென் ஆப்ரிக்காவின் மார்க் பவுச்சர் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து…

நியூசிலாந்து அணி பந்து வீச்சு

ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனைப் படைத்து டோனி அசத்தல்