விளையாட்டு

பார்வையற்றோர் கிரிக்கெட் அமைப்பை அங்கீகரிக்கக் கோரி பி.சி.சி.ஐ.க்கு சச்சின் கடிதம்

(UTV|INDIA)-இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி நான்கு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. இருந்தாலும், பார்வையற்ற வீரர்களுக்கு அங்கீகாரம் மற்றும் நிதியுதவி குறைவாகவே கிடைக்கிறது. சமீபத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி உலகக்கோப்பை வென்ற போது பி.சி.சி.ஐ வீரர்களுக்கு பரிசுகளை வழங்கியது.

இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவரான வினோத் ராய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பார்வையற்ற வீரர்களை வாரியத்தின் பென்சன் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனால், வீரர்கள் நீண்ட கால பயன்களை பெறுவார்கள் என்றும், வீரர்கள் உறுதியுடன் விளையாடுவார்கள் என்றும் சச்சின் தனது கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஷகீன் ஷா அப்ரிடிக்கு அபராதம்

இலங்கையில் மன்செஸ்ட்டர் கால்பந்தாட்ட பயிற்சிக் கூடத்தை அமைக்க நடவடிக்கை