வகைப்படுத்தப்படாத

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இன்று முதல் விசேட பஸ் சேவை முன்னெடுப்பு

(UTV|COLOMBO)-உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இன்று பிற்பகல் முதல் விசேட பஸ் போக்குவரத்து சேவையை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

விசேட சேவையின் நிமித்தம் 150 பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அத்தியட்சகர் ஆர்.ரி.சந்திரசிறி குறிப்பிட்டார்.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக , தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட செயலகங்களூடாக சுமார் 1000 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக தத்தமது கிராமங்களுக்கு செல்லும் வாக்காளர்கள் மீண்டும் கொழும்பு நோக்கி வருவதற்கு, எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

தரம் 1ற்கான அனுமதிப்பத்திரங்களை பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கலாம்

சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

Australia beat England to win 2nd Women’s Ashes ODI