சூடான செய்திகள் 1

500 கோடி ரூபா பெறுமதியான வைரம் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு…

(UTV|COLOMBO) பன்னிப்பிட்டி பகுதியிலுள்ள வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 500 கோடி ரூபா பெறுமதியான வைரத்தை மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெற்று, பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

 இந்தச் சம்பவம் தொடர்பில் கெலும் இந்திக எனும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரல்

மேலும் மூவருக்கு தொற்று, 35 பேர் பூரண குணம்

சபாநாயகர் – கட்சித்தலைவர்கள் இடையேயான சந்திப்பு இன்று(07)