சூடான செய்திகள் 1

500 கோடி ரூபாய் பெறுமதியான வைரக்கல் கண்டுபிடிப்பு…

(UTV|COLOMBO) பாணந்துறை – வாழைத்தோட்டம் பிரதேசத்தின் வீடொன்றில் இருந்து  500 கோடி ரூபாய் பெறுமதியான நீல நிற வைரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டி – எருவ்வல பிரதேசத்தின் மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பெஹலியகொட குற்றவிசாரணைப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.இச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

 

Related posts

நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் கைது

ஜா – எல பகுதியில் 6 மில்லியன் ரூபா பெறுமதியான ஆப்பிள் போதைப்பொருள் பறிமுதல்

கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்