உள்நாடு

50 பயணிகளுடன் பயணித்த பஸ் – திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம்

கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று மாதம்பே-கவுடுவாவ பிரதேசத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இன்று (10) காலை கொழும்பில் இருந்து புறப்பட்ட பஸ்ஸில் சம்பவம் இடம்பெற்ற போது சுமார் 50 பயணிகள் அமர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் பஸ் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சமல் ராஜபக்ஷவிற்கு இரட்டை இராஜாங்க அமைச்சு பதவி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் நியமனம்

editor

மின்சாரம் மற்றும் எரிபொருள் சேவைகள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி

editor