உள்நாடு

50 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்து – நால்வர் காயம்

கெப்பெட்டிபொல – பொரலந்த பிரதான வீதியில் போகஹகும்புர பிரதேசத்தில் கார் ஒன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளதாக போகஹகும்புர பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரில் பயணித்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ள நிலையில் போகஹகும்புர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போகஹகும்புர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நத்தார் தினத்தை முன்னிட்டு தூதுவர்களுடனான விசேட சந்திப்பு

நாராஹென்பிட்ட பகுதியில் மூன்று மாடி கட்டிடமொன்றில் தீ பரவல்

editor