உள்நாடு

50 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்து – நால்வர் காயம்

கெப்பெட்டிபொல – பொரலந்த பிரதான வீதியில் போகஹகும்புர பிரதேசத்தில் கார் ஒன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளதாக போகஹகும்புர பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது காரில் பயணித்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ள நிலையில் போகஹகும்புர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போகஹகும்புர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கைக்கு பாராட்டு தெரிவித்த IMF!

அமைச்சுப்பதவிகளில் மாற்றம்

1,200 ரூபிக்ஸ் கியூப்களால் உருவாக்கப்பட்ட ஜனாதிபதியின் உருவப்படம் – உலக சாதனை படைத்த 12 வயது சிறுவன்

editor