விளையாட்டு

5 வது முறையாக பட்டத்தை வென்ற ஜோன்

(UTV|COLOMBO)-அட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் ஜோன் இஸ்னர், சக நாட்டு வீரர் ரையான் ஹாரிசனை சந்தித்தார்.

2 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜோன் இஸ்னர் 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரையான் ஹாரிசனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

33 வயதான ஜான் இஸ்னர் 5 வது முறையாக அட்லாண்டா ஓபன் பட்டத்தை வென்றார்.

இதற்கு முன்பு 2013, 2014, 2015, 2017 ஆம் ஆண்டுகளில் இந்த பட்டத்தை வென்று இருந்தார். இதன் மூலம் ஜான் இஸ்னர் அட்லாண்டா ஓபன் பட்டத்தை 5 முறை வென்ற அமெரிக்க வீரர்கள் பட்டியலில் ஜிம்மி கானர்ஸ், ஜான் மெக்கன்ரோ, பீட் சாம்பிராஸ், ஆந்த்ரே அகாசி ஆகியோருடன் இணைந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரோஹிட் சர்மாவுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது

பங்களாதேஷ் வீழ்த்தி, நியூசிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றியது

இன்றைய போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற திமுத் காருணாரத்ன