உள்நாடு

5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) –

5 மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் வரை என மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பதுளை, கண்டி, மாத்தளை, மொணராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பகுதிகளுக்கு குறித்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று இரவு பதுளை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக ரயில் பாதை தடைப்பட்டுள்ளதுடன், ரயில் ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அப்பகுதியை வழமைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொவிட் 19 : மீளவும் மக்களுக்கான அறிவுறுத்தல்

விசேட தடுப்பூசி வேலைதிட்டத்திற்கு அனைத்தும் தயார்

இங்கிலாந்து புதிய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து