வகைப்படுத்தப்படாத

கடற்தொழிலாளர்களுக்கு நிவாரணம்-அமைச்சர் மஹிந்த அமரவீர

(UTV|COLOMBO)-அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் மூலம் பொருளாதார வெற்றியை பெற்றுக் கொள்வதற்காக அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

2017 ஆம் ஆண்டு ஆகக்கூடுதலான வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொண்ட வருடமாகும் என்றும், இது பாரிய வெற்றி என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

நாட்டில் மீன் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனை மேலும் அதிகரிப்பதற்கு கடற்தொழிலாளர்களுக்கு தேவையான மேலதிக நிவாரணம் மற்றும் தேவையான வசதிகள் பெற்று கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

පොලිස් නිලධාරීන් අට දෙනෙකුට ස්ථාන මාරුවීම් – පොලිස් මාධ්‍ය ප්‍රකාශක කාර්යාලය

ஜப்பானில் 5.8 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர்களை பின்தொடரும் புலனாய்வாளர்கள்!