வகைப்படுத்தப்படாத

16ம் திகதி வரை விளக்கமறியலில்-அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேனவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

மத்திய வங்கியின் முறி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பேபெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் எதிர்வரும் 16ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை வெள்ளவத்தை மற்றும் கொள்ளுப்பிட்டியவில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து அவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தடுத்து வைத்து வாக்குமூலங்களை பெற்று வந்தனர்.

இந்நிலையில் , அவர்கள் நேற்று இரவு கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப் பட்ட நிலையில் இன்றைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை, முறி விநியோக மோசடி விவகாரத்தில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனும் சந்தேகத்திற்குரியவராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்க்கது.

Related posts

California hit by biggest earthquake in 20-years

மேலும் கால அவகாசம் வழங்கியுள்ள சவுதி

கொழும்பு பிரதேச குப்பைகள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு பிரதமர் நடவடிக்கை