வகைப்படுத்தப்படாத

“Ride with Pride” இராணுவத்தினரின் சைக்கிள் ஓட்டப்போட்டி

(UTV|COLOMBO)-ஆயிரக்கணக்கான பொது மக்கள் மற்றும் இராணுவத்தினரின் பங்களிப்போடு முதன் முறையாக “Ride with Pride”என்ற தொனிப்பொருளில் சைக்கிள் ஓட்டப்போட்டி ஆரம்பமானது.

இலங்கை இராணுவத்ததினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி பத்தரமுல்லைப் பிரதேசத்தில் உயிர் நீத்த படை வீரர்களின் நினைவுத் தூபியிலிருந்து நேற்று காலை ஆரம்பமானது.

இந்நிகழ்விற்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை இராணுவப் பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வரவேற்றார்.
இப்போட்டியில் இராணுவத் தளபதியும் கலந்து கொண்டார்.

மேலும்; இம் மாபெரும் போட்டியில் 300ற்கும் மேற்பட்ட முப்படையினர் மற்றும் சிவில் சேவைகளின் அதிகாரிகளும் கலந்து கொண்டதுடன், இப் போட்டிகளுக்கான ஒழுங்குகளை இராணுவ விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அருண சுதசிங்க மற்றும் இராணுவ சைக்கிள் ஓட்ட சங்கத்தின் தலைவரான பிரிகேடியர் துமிந்த சிறிநாகவின் பங்களிப்போடும் இடம்பெற்றது.

இப்போட்டி தலவத்துகொடை, பெலவத்தை ,பன்னிப்பிட்டிய, கொட்டாவை, ஹோமாகமை மற்றும் பிட்டிப்பான போன்ற சந்திகளில் ஆரம்பமானதுடன் பனாகொடை இராணுவத் தலைமையகத்தை சென்றடைந்து.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பல்கலைகழகங்களுக்கு தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை

මරණ දඬුවම් තීන්දුව කල් යයි

காணாமல் போன MH370 மலேசிய விமானத்தின் மர்மம்-5 வருட நினைவு கூறல்