சூடான செய்திகள் 1

49 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்-நுகர்வோர் அதிகார சபை

(UTV|COLOMBO)-கடந்த டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் இந்த வருடம் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் மேற்​கொண்ட சுற்றிவளைப்பின் போது 49 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த சுற்றிவளைப்பின் போது அபராதத் தொகையாக 89,500 இலட்ச ரூபாய் பணமும் அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை, 2018 ஆண்டு 21,188 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது 21,254 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

ஆறுமுகன் தொண்டமான் பதவி விலகினார்

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

வவுனியா வாகன விபத்தில் 5 பேர் பலி