(UTV|COLOMBO)-நாட்டில் கடந்த 63 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக அரச வருமானத்தில் 22 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும் பொருளாதார வளர்ச்சியின் வேகம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியமும் இலங்கை மத்திய வங்கியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை, முறையான வேலைத்திட்டம் என்பனவற்றினால் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 5.5 சதவீதம் வரை அதிகரித்திருந்தது.
வருமானம் ஈட்டும் எந்த அரச நிறுவனமும் தனியார் மயப்படுத்தப்படவில்லை.
அத்துடன், பாரிய கடன் சுமையில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை, மக்களுக்கு சுமை ஏற்படுத்தாத வகையில் முகாமைத்துவம் செய்து, அரச கடன் பெறுகையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]