(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சியின் துணை நிறுவனமான SLT Human Capitol Solutions நிறுவனம், தனது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களை வழங்குவது மற்றும் பாடசாலை புத்தகங்களை விநியோகிக்கும் வருடாந்த நிகழ்வை அண்மையில் முன்னெடுத்திருந்தது.
தொடர்ச்சியாக 8வது ஆண்டாக முன்னெடுக்கப்பட்டிருந்த இந்நிகழ்வை, SLT Human Capitol Solutions நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் நலன்புரி சங்கம் ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்தன.
ஜா-எல,குருகே இயற்கை பூங்கா வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், HCSஊழியர்களின் 974 சிறுவர்கள் பங்கேற்றிருந்ததுடன், இதில் தரம் 1 முதல் 13 வரை பயிலும் பிள்ளைகளுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தன. 2017 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, 2016 க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர் தர பரீட்சையில் சித்தியெய்தியிருந்த பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த வருடாந்த நிகழ்வு, HSCஏற்பாட்டில் நடைபெறுவதுடன், அடுத்த தலைமுறையினரான மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்குவது மற்றும் ஊழியர்களை ஊக்குவிப்பது போன்றன முன்னெடுக்கப்பட்டிருந்தன.
நிகழ்வின் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழுமத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன கலந்து கொண்டார். இவருடன், HSC ன் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்களான பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஷான் களுஆரச்சி மற்றும் இதர அதிகாரிகளும் அடங்கியிருந்தனர்.
இந்நிகழ்வில் ரொஷான் களுஆரச்சி கருத்துத்தெரிவிக்கையில்,“எமது நாட்காட்டியில் அடங்கியுள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்த நிகழ்வின் மூலமாக, HSC ன் ஊழியர்களின் அரப்பணிப்புக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் நாம் காண்பிக்கும் பிரதி உபகாரம் உணர்த்தப்படுகிறது. இன்று வழங்கப்பட்ட புலமைப்பரிசில்கள் மற்றும் பாடசாலை புத்தகங்கள் பிள்ளைகளின் கல்வித்திறமைகளை ஊக்குவித்து, அவர்களுக்கு தமது எதிர்கால செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச்செல்ல பயனுள்ளதாக அமைந்திருக்கும்” என்றார்.
நிகழ்வில் பங்கேற்றிருந்த சகல சிறுவர்களையும் மகிழ்ச்சியூட்டும் வகையிலான செயற்பாடுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]